ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்துக்கான விருது -மத்திய அரசு

ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Update: 2019-11-02 06:09 GMT
புதுடெல்லி, 

கோவாவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 

இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.  பிரெஞ்சு நடிகை இஸ்பெல்லே ஹூயுபெர்டிக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்