வாட்ஸ் அப் சர்ச்சை: நவ.20-ல் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு விசாரணை

வாட்ஸ் அப் மூலம் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் வேவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

Update: 2019-11-06 10:50 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தை வரும் நவம்பர் 20 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆயிரத்து 400 பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்கள் தங்கள் தளம் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வாட்ஸ் ஆப் தகவல் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்