அயோத்தி வழக்கில் வாதங்களில் உதவிய தமிழர்

அயோத்தி வழக்கில் வாதங்களில் தமிழர் ஒருவர் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-11-10 21:30 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அயோத்தி வழக்கில் ஒரு தரப்பான ராம்லல்லா விராஜ்மான் விக்ரகம் சார்பில் ஆஜராகி வாதிட்டவர்கள் மூத்த வக்கீல்களான கே.பராசரன், சி.எஸ்.வைத்தியநாதன், ரஞ்சித் குமார்.

இவர்களுக்கு பக்க துணையாக இருந்து ஆதாரங்கள், தொல்லியல் துறை ஆவணங்கள், பயண குறிப்புகள், வரைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை திரட்டி தொகுத்து அளித்தவர், தமிழரான வக்கீல் பி.வி.யோகேஸ்வரன்.

தேனி மாவட்டத்தில் உள்ள உப்புக்கோட்டை என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த இவர், 9 ஆண்டு காலம் மூத்த வக்கீல்களுடன் இணைந்து அயோத்தி வழக்கில் பணியாற்றி இருக்கிறார்.

அயோத்தி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியான பின்னர் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தவர்களிடம் மூத்த வக்கீல் கே.பராசரன், “இந்த யோகேஸ்வரனுக்கு முதலில் வாழ்த்து தெரிவியுங்கள். எங்கள் வாதங்களுக்கு இவர்தான் பக்க பலமாக இருந்தார்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்