பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-20 17:26 GMT
புதுடெல்லி,

நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது. அந்த வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக ஏர் இந்தியா, மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விற்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில், “நம் நாட்டிலுள்ள நிறுவனங்கள் நமக்கு பெருமை சேர்ப்பவை ஆகும். அவை, பொன் முட்டைகளை இடும் பறவைகள். நாட்டை மேலும் வலுப்படுத்தி கட்டமைப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜனதா இந்தியாவின் சிறந்த அமைப்புகளை நஷ்டமாக்கிவிட்டு அவற்றை விற்க தீவிரமாக செயல்படுவது பெரும் வருத்ததை அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்