தேசியவாத காங்கிரஸ் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கம் - எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடவடிக்கை

தேசியவாத காங்கிரஸ் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2019-11-23 14:42 GMT
மும்பை,

மராட்டியத்தில் நேற்று பாரதீய ஜனதா தலைமையில் புதிய அரசு அமைந்து அரசியல் திருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மொத்தம் உள்ள 54 எம்.எல்.ஏ.க்களில் 49 பேர் கலந்து கொண்டனர். 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. இந்தக்கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் அதிரடியாக நீக்கப்பட்டார். தேசியவாத காங்கிரசின் அடுத்த சட்டசபை குழு தலைவர் தேர்வு செய்யப்படும் வரை கட்சி சார்ந்த அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலிடம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்