நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்; மக்களவை சபாநாயகர்

அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் எம்.பி.க்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் கூறியுள்ளார்.

Update: 2019-11-26 12:19 GMT
புதுடெல்லி,

நாட்டில் அரசியலமைப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில், நாடாளுமன்ற மைய அவையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று உரையாற்றினார்.

அதில், அரசியலமைப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், நாட்டின் குடிமக்கள் தங்களது கடமைகளில் இருந்து விலகி உரிமைகளை பற்றி மட்டுமே பேசினால், அது சமனற்ற நிலையை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தி விடும்.

அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளவற்றின்படி, உரிமைகளை அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல் கடமைகளை நிறைவேற்றுவதிலும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.  அதனுடன் மற்றவர்களுக்கும் இதனை அவர்கள் நினைவுறுத்த வேண்டிய உயர்ந்த தருணம் இதுவாகும் என பேசினார்.

மேலும் செய்திகள்