ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-28 07:44 GMT
புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள்  மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் கெயித், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து தீர்ப்பு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

முன்னதாக, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை தனது வாதத்தில் குறிப்பிட்டது. மேலும்,  சிபிஐ வழக்கில் மட்டுமே கார்த்தி சிதம்பரத்திற்கு  ஜாமீன் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

மேலும் செய்திகள்