2ஜி வழக்குகளுக்கு தனி அமர்வு - சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்

2ஜி வழக்குகளுக்கு தனி அமர்வு அமைப்பதற்கு, சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது.

Update: 2019-12-04 21:05 GMT
புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேர் கடந்த 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன.

இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். 2ஜி தொடர்பான மனுக்களை விசாரிக்க ஒரு அமர்வு அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த நீதிபதிகள், ஜனவரி மாதம் ஒரு அமர்வை அமைப்போம் என்று கூறினர்.

மேலும் செய்திகள்