ஜியோ செல்போன் கட்டணம் 39 சதவீதம் உயர்ந்தது

ஜியோ தனது செல்போன் கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தியுள்ளது.

Update: 2019-12-04 21:12 GMT
புதுடெல்லி,

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வந்தன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன.

இதன்படி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினமும் 1½ ஜி.பி. டேட்டா, ஒரு மாத திட்டத்துக்கான கட்டணம் ரூ.153-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் செய்திகள்