குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்

குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.

Update: 2019-12-11 20:14 GMT
கவுகாத்தி,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், நேற்று தேஸ்பூருக்கு சென்று விட்டு, ஹெலிகாப்டரில் கவுகாத்தி விமான நிலையத்துக்கு திரும்பி வந்தார்.

அப்போது, விமான நிலையத்தை ஒட்டியுள்ள சாலைகளை அடைத்தபடி மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக தகவல் கிடைத்தது. இதனால், முதல்-மந்திரி சோனோவால், விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், அங்கேயே இருந்தார்.

போராட்டம் ஓய்ந்த பிறகு அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேறி, விருந்தினர் மாளிகைக்கு போய் சேர்ந்தார்.

மேலும் செய்திகள்