ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு

மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2020-01-15 23:02 GMT
புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது அங்கு இயல்புநிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் 19-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரையில் மத்திய அமைச்சர்கள், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பயணத்தின்போது அமைச்சர்கள் மக்களின் கருத்துக்களை கேட்டறிவதோடு, அரசின் இந்த முடிவின் மூலம் மக்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் மற்றும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்