பல்கலைக்கழகங்களை அரசியல் போராட்ட களமாக்குவதை மத்திய அரசு அனுமதிக்காது - மத்திய மந்திரி

பல்கலைக்கழகங்களை அரசியல் போராட்ட களமாக்குவதை மத்திய அரசு அனுமதிக்காது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

Update: 2020-01-24 15:48 GMT
ஸ்ரீநகர், 

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவரிடம், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:–

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றன. பல்கலைக்கழகங்கள், படிப்பு மையமாக திகழ்கின்றன. அங்கு மாணவர்கள் இலக்குடன் படிக்க வேண்டும். சர்வதேச அளவுக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

அவர்கள் எந்த சிறு பிரச்சினையிலும் சிக்கி கொள்ளக்கூடாது. எனவே, பல்கலைக்கழகங்களை அரசியல் போராட்ட களமாக்குவதை மத்திய அரசு அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்