மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-01-25 14:44 GMT
புதுடெல்லி,

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்மஸ்ரீ விருதுகள் பெறுபவர்கள் பெயர்கள் பின்வருமாறு:-

* அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவர் 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் ஆவர்.

* கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சி

* ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவு

* பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவு

* உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப்

* அசாமில் யானைகளுக்கு மருத்துவ சேவையாற்றி வரும் கால்நடை மருத்துவர் குஷால் கன்வார் 

* குறைந்த செலவில் மருத்துவ சேவை புரிந்துவரும் மேற்குவங்க மருத்துவர் அருனோடே மண்டல்

* மராட்டியத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வரும் பப்பட்ராவ் பவார் ஆகியோர் ஆவர்.

மேலும் செய்திகள்