அசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள்

அசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு மாணவர்கள் கருப்புக்கொடி காட்டினர்.

Update: 2020-01-26 19:46 GMT
கவுகாத்தி,

அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று குடியரசு தின விழாவின்போதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் நகான் மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவரை மாணவர் அமைப்புகளை சேர்ந்த போராட்டக்காரர்கள் வழிமறித்து கருப்புக்கொடி காட்டினர்.

மந்திரியை திரும்ப செல்லுமாறு கோஷமிட்ட அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கலைந்து போக செய்தனர்.

இதைப்போல காம்ரப் மாவட்டத்தில் நடந்த விழாவில் பங்கேற்க சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. அங்கூர்லதா தேகாவுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்