‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

Update: 2020-01-27 19:30 GMT
புதுடெல்லி,

நீட் தேர்வு தொடர்பான திருத்த சட்டங்களை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்து இருந்தது. அந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

மேலும் நீட் தேர்வு போன்ற தேர்வு முறைகளை மாற்றி அமைப்பது நீதிமன்றங்களின் வேலையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தேர்வு பிரச்சினையில் ஒவ்வொருவருக்காக உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என்றும் கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டனர்.

மேலும் செய்திகள்