டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

Update: 2020-02-03 00:55 GMT
புதுடில்லி,

புதுடில்லி சட்டசபை தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 3ம் தேதியும், துவாரகா பகுதியில் 4-ம் தேதியும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என அக்கட்சி தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கு பெற உள்ளார். தேர்தல் பிரசாரம் இன்று மாலை 2 மணியளவில் கிழக்கு டெல்லி பகுதியான கார்கர்டோமா பகுதியில் உள்ள் சிபிடி மைதானத்தில் நடைபெற உள்ளது. மற்றொரு பேரணி நாளை (4 ம் தேதி) துவாரகா பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

மேலும் செய்திகள்