சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானிய தொகை உயர்வு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் வங்கிக்கணக்கில் கிடைக்கும் மானியத்தொகையும் உயர்ந்துள்ளது.

Update: 2020-02-14 04:55 GMT
புதுடெல்லி, 

வீட்டு பயன்பாட்டுக்காக வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.147 உயர்த்தப்பட்டது. சென்னையில் அதன் விலை ரூ.881 ஆக உயர்ந்துள்ளது.

மானிய விலை சிலிண்டராக இருந்தாலும், மானியத்தை கழிக்காமல் முழு தொகையையும் அளித்துத்தான் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்க வேண்டும். பின்னர், மானியத்தொகை, வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

அந்தவகையில், சமையல் கியாஸ் விலை உயர்ந்ததால், வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மானியத்தொகையும் அதிகரித்துள்ளது. இதை பெட்ரோலியத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது. உதாரணமாக, டெல்லி வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வந்த மானியத்தொகை ரூ.153.86-ல் இருந்து ரூ.291.48 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, மானியத்தொகை 138 ரூபாய் அதிகமாக கிடைக்கும்.

டெல்லி மக்களுக்கு கியாஸ் விலை ரூ.144.50 அதிகரித்துள்ளது. அதில், ரூ.138 மானியமாக திரும்ப கிடைக்கிறது. எனவே, கியாஸ் விலை உயர்வின் பெரும்பகுதியை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்