இடஒதுக்கீடு முறையை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் மாயாவதி வலியுறுத்தல்

எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.

Update: 2020-02-16 23:00 GMT
லக்னோ,

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரசைத் தொடர்ந்து, தற்போதைய பா.ஜனதா அரசும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் இரக்கமற்ற அணுகுமுறையால்தான் இடஒதுக்கீடு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது பெரிதும் துரதிருஷ்டவசமான நிகழ்வாகும். ஆகவே, இடஒதுக்கீடு முறையை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான், மேற்கண்ட சமூகத்தினரின் இடஒதுக்கீடு உரிமை பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்