டெல்லியில் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் - கல் வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

டெல்லியில் இரு தரப்பினரிடையே இன்று காலை மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

Update: 2020-02-25 03:09 GMT
புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில்  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். 

வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பல போலீசாரும் காயம் அடைந்தனர். காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  5 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த சம்பவங்களால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லி வடகிழக்கில் இன்று மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. நிலமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்