கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: நாளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, நாளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Update: 2020-03-18 17:31 GMT
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 155க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாளை இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 5ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்