சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி வழியாக வழக்கு விசாரணை

சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி வழியாக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

Update: 2020-03-23 20:20 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் அறைகள் மூடி, சீல் வைக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று காலை அறிவித்தது. ஒரே ஒரு அறையில் நீதிபதிகள் அமர்ந்து இருந்து மிக மிக அவசரமான வழக்குகளில் மட்டும் காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவசர வழக்குகளில் காணொலி காட்சி வழியாக விசாரணை நடத்துகிற நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக்கொண்ட முதல் அமர்வு, முதலாவது கோர்ட்டில் காணொலி காட்சி வழியாக 3 வழக்குகளில் விசாரணை நடத்தினர். அந்த கோர்ட்டு அறையில் பெரிய அளவிலான ஒரு திரையும், பிற உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன.

அதேபோன்று பழைய பதிவாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு அறையில் இருந்து வக்கீல்கள் வாதாடினார்கள். அங்கும் அதற்காக திரைகளும், பிற உபரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்