32 துணை ராணுவ ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை - மத்திய அரசு அதிரடி முடிவு

கொரோனா பாதித்தவர்களுக் 32 துணை ராணுவ ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-03-25 23:00 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதி கரித்து வருகிற நிலையில், அவற்றின் தாக்குதலுக்கு ஆளானவர்ளை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக செய்து வருகின்றன.

அந்த வகையில் துணை ராணுவ படைகளுக்கு சொந்தமான 32 ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்தவர்களை சேர்த்து தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 32 ஆஸ்பத்திரிகளிலும் சேர்த்து மொத்தம் 1,900 படுக்கைகள் உள்ளன.

இந்த ஆஸ்பத்திரிகளை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பயன்படுத்துவதற்கான அவசர முடிவு, டெல்லியில் எல்லைப்பகுதி நிர்வாக செயலாளர் தலைமையில் நேற்று நடந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை உள்ளிட்ட பல்வேறு துணை ராணுவ படைகளால் நடத்தப்படுகிற இந்த 32 ஆஸ்பத்திரிகளும் சென்னை ஆவடி, கிரேட்டர் நொய்டா, ஐதராபாத், கவுகாத்தி, ஜம்மு, குவாலியர், இம்பால், நாக்பூர், சில்சார், போபால், ஜோத்பூர், கொல்கத்தா, புனே, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ளன.

மேலும் செய்திகள்