ஊரடங்கு கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1.70 லட்சம் கோடி உதவிகள்

கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-26 08:37 GMT
புதுடெல்லி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.

 யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்.

வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்

மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் உதவிக் கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்துள்ளது.

 கொரோனாவுக்கு எதிராக போரிடும் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு எடுக்கப்படும்.

விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்

20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்  என கூறினார்.

மேலும் செய்திகள்