நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 45; மாநில அரசுகள் தகவல்

நாட்டில் மாநில அரசுகள் அளித்த தகவலின்படி கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

Update: 2020-03-31 14:20 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

நாட்டில் மாநில அரசுகள் அளித்த தகவலின்படி, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதன்படி, மராட்டியத்தில் 10 பேர், குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 6 பேர், மத்திய பிரதேசத்தில் 5 பேர், பஞ்சாப்பில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 பேர், இமாசல பிரதேசம், தமிழகம், பீகாரில் தலா ஒருவர் என 45 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,418 ஆகவும், சிகிச்சை முடிந்து சென்றவர்களின் எண்ணிக்கை 123 ஆகவும், பலி எண்ணிக்கை 45 ஆகவும் உள்ளது.

எனினும், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 49 வெளிநாட்டினர் உள்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆகவும், சிகிச்சை முடிந்து சென்றவர்களின் எண்ணிக்கை 102 ஆகவும், பலி எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்