இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-02 04:56 GMT
புதுடெல்லி,

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் வியாபித்துள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

அதேபோல், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834-ல் இருந்து 1965 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 41-ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 144-ல் இருந்து 151 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்