கொரோனா பாதிப்பு; ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை

நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2020-04-02 14:06 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.  இதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது, ஐ.பி.சி. மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுபற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் வழியே தகவல் தெரிவித்து உள்ளார்.

அதில், கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறும் எந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.  விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.  இதேபோன்று, வதந்தி பரப்பினாலும் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்