ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்; வீட்டு தயாரிப்பு முககவசத்தை அணிந்து இருந்த பிரதமர் மோடி

ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வீட்டில் தயாரிக்கப்படும் முககவசத்தை பிரதமர் மோடி அணிந்து இருந்தார்.

Update: 2020-04-11 08:13 GMT
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25ந்தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வருகிற செவ்வாய்க்கிழமை ஊரடங்கு முடிவதை யொட்டி ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வழியே ஆலோசனை கூட்டம் தொடங்கியது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல் மந்திரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி முதல் அமைச்சர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். பிரதமர் மோடி முகத்தை மறைக்க வெள்ளை நிற வீட்டில் தயாரிக்கப்படும் முக கவசத்தை அணிந்து இருந்தார். மராட்டிய முதல்வர் ஒரு அறுவை சிகிச்சை முகமூடியைப் பயன்படுத்தி முகத்தை மூடி இருந்தார்.

மேலும் செய்திகள்