காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.;

Update:2020-04-17 10:32 IST
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தைரூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஆகியோருடன் மத்திய ரிசர்வ் போலீசார் அந்த பகுதிக்கு நேற்றிரவு சென்றனர்.

அதன்பின் அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இந்த பணி இன்று காலையும் நீடித்தது.  இதில் இன்று காலை 6.30 மணியளவில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.  தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்