அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு

அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-25 11:00 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட காங்., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “தற்போது இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இதைப் போன்ற கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்” என மன்மோகன்சிங் கூறுகிறார்.

ராகுல் காந்தி கூறும் போது, “டெல்லியை அழகுப்படுத்த அவர்கள் மிகப் பெரும் நிதியை ஒதுக்கியுள்ளார்கள். நடுத்தர மக்கள் கையிலிருக்கும் பணத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்காமல் இதைப் போல ஆடம்பர செலவுகளுக்குக் கொடுக்கிறது. 

இந்த மத்திய அரசு,” என்று சாடினார்.   முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “புல்லட் ரயில் திட்டம், டெல்லியை அழகுப்படுத்தும் திட்டம் உள்ளிட்டவைகளுக்குத்தான் முதலில் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகுதான் அகவிலைப்படி உயர்வு பற்றி யோசித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்