கர்நாடகத்தில் இலவச பேருந்து சேவை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிப்பு

கர்நாடகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாள்கள் நீட்டித்து அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-04 09:27 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாள்கள் நீட்டித்து அம்மாநில முதல் மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்  நோய் பரவலைக் கட்டுப்படுத்த  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . ஊரடங்கு காரணமாக  கர்நாடகாவில் வெளி மாவட்டங்களில் தங்கி பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். 

அவர்கள் சொந்த ஊா்களுக்கு திரும்ப ஒருமுறைக்கு மட்டும் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடா்ந்து, பெங்களூரில் இருந்து கா்நாடகத்தில் பிற மாவட்டங்களுக்கு பெங்களூரு, கெம்பேகௌடா பேருந்துநிலையத்தில் இருந்து சனிக்கிழமை பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவற்றில் சொந்த ஊா்களுக்கு செல்ல மக்கள் திரண்டிருந்தனா். ஆரம்பத்தில் இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடா்ந்து, மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைக்கு பயணிகளிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று முதல்வா் எடியூரப்பா நேற்று  அறிவித்தாா். மேலும் இந்த இலவச பேருந்துகள் 3 நாள்களுக்கு மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச பேருந்து சேவையை மேலும் இரண்டு நாள்கள் நீட்டித்து எடியூரப்பா இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் செவ்வாய்கிழமையுடன் முடிவடையவிருந்த இலவச பேருந்து சேவை தற்போது வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்