கேரளாவில் மீண்டும் தொடங்கிய படகு போக்குவரத்து

கேரள மாநிலம் ஆலபுழா மாவட்டத்தில் சில நிபந்தனைகளுடன் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.

Update: 2020-05-22 12:01 GMT
கேரளா,

கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. 

கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக படகு போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் நீர்வழி போக்குவரத்து அதிக அளவில் உள்ளதால் கேரள மாநிலம் ஆலபுழா மாவட்டத்தில் சில நிபந்தனைகளுடன் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து ஆலப்புழா மாவட்டத்தில்படகு போக்குவரத்து கடந்த 20ம் தேதி முதல்  மீண்டும் தொடங்கி உள்ளது.  சிறிய அளவிலான படகு முதல் பெரிய அளவிலான படகுகள் வரை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த படகு போக்குவரத்து உள் மாவட்டங்களுக்கு மட்டுமே என அரசு அறிவித்துள்ளது. 

3 கி.மீ வரையிலான தொலைவுக்கு குறைந்த பட்ச கட்டணம் 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 கி.மீ.க்கு மேல் பயணிப்பதற்கு, தற்போதைய பயண கட்டணத்தில் 33 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் நீர்வழிப் போக்குவரத்து மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்