இந்தியாவில் மீன்பிடி தடைக்கான காலஅளவை குறைத்தது அரசு

இந்தியாவில் மீன்பிடி தடைக்கான காலஅளவை குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-05-26 08:39 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதனை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் மீன்பிடி தடைக்கான காலஅளவை குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.  ஊரடங்கு உத்தரவால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதுவரை 61 நாட்கள் என இருந்த மீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை இருந்த தடைக்காலம் ஏப்ரல் 15ந்தேதி முதல் மே 31ந்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவின் மேற்கு கடற்கரையில் ஜூன் 1ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15ந்தேதி முதல் ஜூலை 31ந்தேதி வரை என குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்