தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை - கர்நாடக அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-05-28 16:14 GMT
பெங்களூரு,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதற்கிடையே மே 12 முதல் 15 ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்