இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-28 17:44 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உள்பட 30 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட நிபுணர்கள்வரை அடங்கும். 20 குழுக்கள் முழு வேகத்தில் உள்ளன.

பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த தடுப்பூசியை ஓராண்டுக்குள் உருவாக்குவதுதான் உலக நாடுகளின் நோக்கம். தடுப்பூசி கண்டறிவது, மிகவும் சவாலான வேலை. பல முயற்சிகள் தோல்வி அடையலாம். எனவே, பெரிதும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்