பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா அறிக்கை நிரூபிக்கிறது-இந்தியா

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை ஐ.நா அறிக்கை நிரூபிக்கிறது என இந்தியா கூறி உள்ளது.

Update: 2020-06-03 03:55 GMT
புதுடெல்லி

ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறி உள்ளது. 

மேலும்  அறிக்கையில் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது  இருப்பிடம் நங்கர்ஹார் மாகாணத்தின் மொஹமண்ட் தாரா, துர் பாபா மற்றும் ஷெர்சாத் மாவட்டங்கள் ஆகும். குனார் மாகாணத்தில், லஷ்கர்-இ-தொய்பா மேலும் 220 பயங்கரவாதிகளை கொண்டுள்ளது, மேலும் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு மேலும் 30 பேர் உள்ளனர், அவர்கள் அனைவரும் தலிபான் படைகளுக்குள் ஊடுருவி உள்ளனர் என கூறி உள்ளது

இதற்கு பதிலளித்த இந்தியா, பாகிஸ்தான் ஒரு சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்பகுதி" என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை இது நிரூபிக்கிறது என்று கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-

பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தானில் அதன் துணை நிறுவனங்களின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து இருப்பதையும், அத்துடன் 6500 பாகிஸ்தான்  உட்பட ஏராளமான வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதையும் அறிக்கை சுட்டிகாட்டி உள்ளதை தீவிர அக்கறையுடன் குறிப்பிடுகிறோம். 

ஆப்கானிஸ்தானில் லஷ்கர்-இ-தயிபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து செயல்பட்டு, ஆப்கானிஸ்தானில் மற்ற பயங்கரவாதிகளுக்கு கடத்தல் மற்றும் பயிற்சி அளிப்பதை எளிதாக்குகிறது.

"இது சர்வதேச பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை இது நிரூபிக்கிறது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்ந்து பாதுகாப்பான புகலிடங்களை அனுபவித்து வருகின்றனர், 

பாகிஸ்தானில் இருந்து அரசு ஆதரவுடன் தண்டனையின்றி செயல்படுகிறார்கள். அவர்கள் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் வன்முறையைத் தூண்டுகிறார்கள் மற்றும் பரப்புகிறார்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்