தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை - அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-06 10:11 GMT
புதுடெல்லி,

டெல்லியில் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்  செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர்கள் உள்ளன. படுக்கைகளும் உள்ளன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

படுக்கை வசதிகள் காலியாக இருந்தாலும் சில தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம், கருப்புச் சந்தை மூலமாக ஏதேனும் ஒரு குறுக்கு வழியில் மருத்துவமனையில் படுக்கை வசதியைப் பெற முயற்சிப்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்