இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-06-29 09:30 GMT
புதுடெல்லி,

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய சுகாதாரத்துறை தகவல்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 380 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,475 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்று 15 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை 3,57,783 ஆக நோய்த் தொற்றுகள் அதிகரித்துள்ளன.

மேலும் செய்திகள்