மராட்டியத்தில் அதிகரித்து வரும் உயிரிழப்பு: இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் பலி

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-01 15:59 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,761 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 5,537 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 298 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மேலும்  79,075 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 198 பேர் பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 053 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 2,243பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,154 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்