சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம்

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது.

Update: 2020-07-02 05:24 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இந்த விபத்துக்களில் சிக்கி சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் படி, விபத்தில் சிக்குபவர்கள் அனைவருக்கும் ரூ.2.5 லட்சம் வரை பணம் எதுவும் இன்றி இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியை ஏற்படுத்துமாறு, மாநில போக்குவரத்து செயலர் மற்றும் ஆணையர்களுக்கு சாலை போக்குவரத்து அமைச்சகம், கடிதம் எழுதியுள்ளது.  அதேசமயம்,  உரிமம் இன்றி வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள் சிகிச்சையில் இருந்த்நு குணமடைந்தவுடன், இத்தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்