இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-03 04:13 GMT
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. தினம் தினம் புதிய உச்சத்தை கொரொனா வைரஸ் பாதிப்பு எட்டி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், நேற்று ஒருநாளில் மட்டும் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6,25,544 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து 3,79, 892 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்