கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் - பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2020-07-11 09:46 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்ளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களில் நிலவும் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். என்சிஆர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அனைத்து மற்ற மாநில அரசுகளும் ஒரே மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் சுகாதாரம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன், என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர், அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்,

மேலும் செய்திகள்