பீகார் தேர்தல்; 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்கள் தபால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம் முடிவு

பீகார் தேர்தலில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Update: 2020-07-16 14:26 GMT
புதுடெல்லி,

பீகாரில் 243 பேர் கொண்ட சட்டசபை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற அக்டோபரில் நடைபெற உள்ளது.  இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன.

இந்த தேர்தல் மற்றும் வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட குடிமகன்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்.

மேலும் செய்திகள்