அந்தமான் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சி
அந்தமான் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.;
புதுடெல்லி,
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தியா மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்சினை தொடர்பாக சீனா தகராறு செய்து வருகிறது. அத்துடன் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறது. அத்துடன் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது கடற்படையின் பலத்தை காட்டும் வகையிலும் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ், யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது. அந்த இரு கப்பல்களும் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அதன்பிறகு அ ந்த கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டு மலாக்கா நீரிணை பகுதிக்கு வந்தன.
இந்த நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா நீரிணை பகுதியில் நிமிட்ஸ் போர்க்கப்பலும், இந்திய போர்க்கப்பல்களும் நேற்று கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டன.
உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான நிமிட்ஸ் அணுசக்தியில் இயங்கக்கூடியது. இதில் அதில் நவீன 18 எப் சூப்பர் ஹார்னெட், 18 இ சூப்பர் ஹர்னெட் போர் விமானங்கள் உள்ளன.
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையேயான மலாக்கா நீரிணை பகுதி சர்வதேச அளவில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதை ஆகும். இந்த வழியாகத்தான் சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன.
லடாக் எல்லை பிரச்சினையில் சீனாவின் போக்கை கண்டித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இப்போது இரு நாட்டு போர்க்கப்பல்களும் கூட்டாக நடத்தி இருக்கும் பயிற்சியின் மூலம், பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.