அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் - கவர்னர் ஆர்.என்.ரவி

இந்த புத்தாண்டும் நம் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிரப்பட்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.;

Update:2025-12-31 21:29 IST

சென்னை,

2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இந்தியாவில் பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டை பட்டாசுகள் வெடித்தும், வாணவேடிக்கை வைத்தும் 2026-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். ஒருவொருக்கொரும் வாழ்த்துகளை பறிமாறிகொண்டனர். இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆன்மிக தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் என கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ஆம் ஆண்டின் விடியல் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும். நம் வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிரப்பட்டும். அனைவருக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்