சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக மகேஸ்வர் தயாள் பொறுப்பேற்பு

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.;

Update:2025-12-31 21:44 IST

சென்னை,

2026ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல்களுக்கான பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஆயுதப்படை டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக மகேஸ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்று ஆயுதப் படைக்கு பணி மாறுதல் பெற்ற நிலையில், ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் இன்று சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்