இந்தியாவுக்குள் ஊடுருவ 320க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 27 இடங்களில் பதுங்கல்

இந்தியாவுக்குள் ஊடுருவ 320 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை பகுதியில் 27 இடங்களில் பதுங்கி உள்ளனர்.

Update: 2020-07-31 06:00 GMT
புதுடெல்லி: 

320 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள்  ஊடுருவ காத்திருக்கும் வகையில்  எல்லை கட்டுப்பாட்டுப் பாதையில் பாகிஸ்தான் 27 இடங்களில் பதுங்கி உள்ளனர். என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஊடுருவல் முயற்சிகள் அதிகரிப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பயங்கரவாதிகளின் பல உரையாடல்களை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) ஒட்டு கேட்டத்தில் இந்த  விவரம் தெரியவந்து உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆதாரங்களின்படி, 35 பயங்கரவாதிகள் மட்டுமே இந்த ஆண்டு நாட்டிற்குள் ஊடுருவ முயன்றனர். 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 429 யுத்த நிறுத்த மீறல்கள் நடந்திருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 605 ஆக இருந்ததாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், கட்டுப்பாட்டுக் பகுதியில்  விழிப்புணர்வு காரணமாக, குப்வாராவில் பாதுகாப்பு படையினரால் ஒரு பிக்-அப் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது, மேலும் அவர்கள் 10 கிலோ வெடிமருந்து ஏகே 47 ரகதுப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். கைப்பற்றிய கையெறி குண்டுகளில் சீன அடையாளங்கள் இருந்தன, இவை எல்லையைத் தாண்டி தள்ளப்படுவதை தெளிவாகக் குறிக்கின்றன, தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைக்காக இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்