ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020: கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் நடத்தினார்.

Update: 2020-08-01 11:43 GMT
புதுடெல்லி, 

உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில், கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடல் நடத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் மோடி தொடங்கினார்.

அப்போது பேசிய அவர், “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 - டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காணும் முயற்சி. இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன். சவாலான காலகட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாக கடந்து வருவார்கள். மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் விதமாக, அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்