லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை

லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

Update: 2020-08-02 04:49 GMT
புதுடெல்லி,

 லடாக் எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்ட சீன ராணுவம், கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியது. இதற்கு இந்திய தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது.

இதைதொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 5-வது கட்டமாக இன்று நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு கமாண்டர்களும் பங்கேற்கின்றனர். 

கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கவில்லை என்று இந்தியா அண்மையில் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று நடைபெற பேச்சுவார்த்தை உள்ள முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

மேலும் செய்திகள்