ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜிசி முர்மு பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜிசி முர்மு தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-08-06 01:04 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் எனப் பிரிக்கப்பட்ட பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முர்மு , ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக  நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,   துணை நிலை ஆளுநரான கிரீஷ் சந்திர முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய தலைமை தணிக்கை குழு தலைவராக இருக்கும் ராஜீவ் மெகர்ஷி நடப்பு வாரத்தில் ஓய்வு பெற உள்ளார். மத்திய தலைமை தணிக்கை குழு தலைவர் பதவி அரசியல் அமைப்பு பதவி என்பதால், அதை காலியாக வைத்திருக்க முடியாது.

எனவே,  தலைமை தணிக்கை குழு தலைவராக முர்மு நியமிக்கப்பட இருப்பதாக மத்திய அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன. 1985- ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த முர்மு, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரது நிர்வாகத்தில் பணியாற்றுள்ளார். மோடியின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும்  முர்மு, மோடி பிரதமராக பொறுப்பேற்றதும் நிதித்துறையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.  

மேலும் செய்திகள்