திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றிய அர்ச்சகர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

Update: 2020-08-06 19:45 GMT
திருமலை, 

திருப்பதியில் ராமர் கோவில் அருகில் வசித்து வந்தவர் சீனிவாசஆச்சாரிலு (வயது 45). இவர், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நிரந்தர அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். தற்போது ஏழுமலையான் கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், அங்கு அர்ச்சகர்கள் பற்றாக்குறையாலும் சீனிவாசஆச்சாரிலு திருமலைக்கு வந்து ஏழுமலையான் கோவிலில் கடந்தசில நாட்களாக தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர், திருப்பதி சுவிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அர்ச்சகர் சீனிவாசஆச்சாரிலு நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். அர்ச்சகர் சீனிவாசஆச்சாரிலு கொரோனாவுக்கு பலியானதால் ஏழுமலையான் கோவிலில் வேலை பார்க்கும் மற்ற அர்ச்சகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்